34 தண்டொட்டி போடலாமா
( “கிறுக்கன்” ) தமிழ்நாட்டு தாய்மார்களே! தமக்கைமார்களே! தங்கைமார்களே! உங்கள் அனைவருக்கும் அடியேன் வணக்கம் உரியதாகுக! நீங்கள் நான் கூறப்போவதைக் கவனமாகக் கேட்டு உங்கள் விருப்பப்படியே செய்வீர்களாக! கேளுங்கள் தாய்மார்களே! நம் தென்னிந்தியாவில் தமிழ் ஜில்லாக்களில் எங்குப் பார்த்தாலும் காதுகளை வளர்த்து தண்டொட்டி, சவுடி, பாம்படம் என்ற பெயர்களால் தங்கநகைகள் செய்து காதுகளில் கொத்துக் கொத்தாகத் தொங்கவிட்டு வருவது எல்லாரும் நன்கறிந்ததே. இந்தக் காது நகைகள் எப்போது உண்டாயிற்று? என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டது? என்பனவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய இரகசியம் அதில் இருப்பதை நான் கண்டு பிடித்தேன். பெண்ணினத்தை ஆணினம் நம்பாததாலேயே மேற்கண்ட நகைகள் உண்டாக்கப்பட்டன என நான் உணர்கிறேன். பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போகாமலும், ஓடினால் ஓடவிடாமல் தடைசெய்வதற்காகவும், எளிதில் பிடித்து விடுவதற்காகவுமே, மேற்கூறப்பட்ட நகைகளை ஆண்கள் சிருஷ்டித்துப் பெண்களை அடக்கி வைக்க எண்ணிச் செய்யப்பட்டிருக்கலாம் என்பதில் நான் முழு நம்பிக்கையை யுடையேனாக இருக்கிறேன். பெண்கள் தமக்கு இஷ்டப்பட்ட காதலர்களுடன் ஓடிப் போகாதிருப்பதற்காகவே அப்படிச் செய்யப்பட்டிருக்க |