வேண்டும். ஓட முடியாது. ஓடினால் காதிலுள்ள நகைகள் ஆட்டம் போட்டுக் காதை அறுத்துவிடும்படி செய்யும். எனவே ஆணின் சந்தேகமும், குறுகிய புத்தியும், பயமும் ஒன்று கூடிப் பெண்களுக்குக் காதணிகளையும், தண்டை, சிலம்பு, மிஞ்சி முதலிய காலணிகளையும் உண்டாக்கியிருக்க வேண்டும் என நான் கூறுவதில் சந்தேகம் உண்டா? எனவே, சகோதரிகள் நான் கூறுவதை நன்கு பரிசீலனை செய்து தங்கள் சுயமரியாதையையும், சுதந்தரத்தையும் காத்துக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போலவே, விவாக காலங்களில் மாப்பிள்ளை, பெண்களுக்கு அதிக நகை போடுவதும், முக்கியமாக ஆண் பெண்களுக்கு மிஞ்சி போடுவதும் காரணமாகவிருக்கக்கூடும். மாப்பிள்ளை தம் மகளைவிட்டு ஓடிப்போகாமலிருக்க விரும்பி, பெண் வீட்டார் மாப்பிள்ளைகளுக்கு மிஞ்சி போடுகிறார்கள் என நான் ஊகிக்கிறேன். கால் விரலில் கனத்த வெள்ளிக் குண்டுகளால் மிஞ்சி போட்டால், அது ஒருவிதமான விலங்கு, மாப்பிள்ளை ஓடமாட்டார் என்ற உத்தேசத்தின் பேரிலேயே அவ்வாறு முன்னிருந்த மூத்தண்ணர்கள் செய்திருக்கலாம். அதன் தத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல், பழக்கவழக்கம் என்ற உடும்புப் பிடியை இப்போதும் கைவிடாமல் பல விடங்களிலும் அனுஷ்டித்து வரலாம். தண்டை, கொலுசு, சிலம்பு முதலிய காலணிகளும் இதே கருத்தைக்கொண்டே பெண்களுக்குப் போட்டு வரக்கூடும் என்று நான் நினைக்க இடமிருக்கிறதன்றோ? எனவே எல்லாரும் நன்கு யோசித்து எனது பிரேரேபனையை அங்கீகரிப்பதற்கறி குறியாக இன்றுமுதல் நகைகள் அணியும் மானங்கெட்ட செயலை அகற்றுவீர்களாக, நகைகள் அணியப்படுவதன் தத்துவம் இஃதென்று என சில தத்துவ சாஸ்திரிகள் விளக்க முன்வரின், அவர்கள் கூற்றுக்கு ஆதாரமில்லை என்பதை இன்னும் விரிவாக நான் சொல்லத் தயாரா |