துக்கள் அநாவசியமாக விடப்பட்டிருப்பதை நிவர்த்தி செய்து அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையை வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அவசியமானவைகளாகச் செய்துவிடலாம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதாவது நான் மேலே ஆக்கியுள்ள பாடலும் பாடல்தான். ஏனென்றால், ஆதியில் என்னைப்போலவே முதலில் எழுத்துக்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கினார்கள். எனவே அவர்களும் மனிதர்தாம்; நானும் மனிதர்தான். ஆகவே நான் புதுமுறையில் பாடல் போட்டிருப்பது தவறாகுமா? இதே பாடல் மக்களிடம் சில ஆண்டுகள் வழங்கிவரின் இதுவும் மற்றவையும் ஒன்றாகிவிடாதா என்பது கவனத்திற்கு உரியது. எனவே, புதுமை என்பதைக் கொண்டு வெறுப்பதோ, அதிசயிப்பதோ அறிவீனமாகும். என்ன நேயர்களே! எல்லாம் விளங்கி விட்டதா? இந்தப் பாட்டுக்கு அர்த்தம் கூறுகிறர்வளுக்கு ஆயிரம் கோடி பவுன் பரிசளிப்பதாக நான் முதலில் சொல்லியிருந்ததற்கு, நானே பொருள் கூறிவிட்டேனாதலால் அந்தப் பரிசும் எனக்கே உரியதாகும் என்பதுடன் அமர்கிறேன். ஆ! ஆ!! ஆ!!! புதுவை முரசு, மார்ச்சு, 1932 * |