பாவம்! இன்னும் உங்களைக் குழப்ப நிலையில் வைக்க விரும்பவில்லை. எனவே இது இன்னது என்பதை விளக்கி வைக்கிறேன். கவனியுங்கள் “ஙங்ஙஃ” என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும். ஆகவே அதன்கீழ் கூறப்பட்டிருப்பது ஒரு புதிய பாடலாகும். அதன் பொருளை வரிசையாகக் கூறுகிறேன். | பதவுரை | | | | | | ஙிங்கலந்தன | - | கடவுளைப்பற்றி | | ஙேதி | - | கவலைப்படுகிறவர்கள் | | ஙேவலல் | - | கடைந்தெடுத்த | | ங்ங் கலந்தன | - | முட்டாள்களேயாவர் | | ஙாஙி | - | நீ | | ஙாவரம் | - | முன்னேற | | ஙங்கலந்தன | - | விரும்பினால் | | ஙூஙென | - | சுயமரியாதை | | ஙோரிது | - | இயக்கத்தில் | | ஙெங்கலந்தன | - | சேர்ந்து | | ஙேரி | - | அதை (முன்னேற்றத்தை) | | ஙீத்தலே | - | அடைவாயாக |
என்பதே அப்புதிய பாடலின் பொருளாகும். கருத்துரை யாதெனில் “கடவுளைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவார்; நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக” என்பதேயாகும். “இதென்னையா! புதுமையாய் இருக்கிறது! இப்படியும் ஒரு பாட்டு உண்டா? “ங” வரிசையில் பெரும்பாலான எழுத்துக்களுக்குத் தமிழ் மொழியில் அர்த்தமில்லாமல் இருக்கின்றனவே! அப்படியிருக்கும்போது நீர் என்னவோ கூறுகிறீரே?” என்பதாகப் பலரும் ஐயுறக்கூடும். நான் முதலிலேய குறிப்பிட்டு இருக்கின்றேனே, இது புதிய பாடல் என்பதாக. ங, வரிசையில் பல எழுத் |