பக்கம் எண் :

165

40
பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம்


( “கிறுக்கன் எழுதியது” )

மூவுலகங்களையும், அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களையும் தாவரங்களையும், மலைகளையும், கடல்களையும் மற்றுமுள்ள ஏனைய சகலவற்றையும் படைத்த சர்வவல்லமையுள்ள, எல்லாஞ் செய்யவல்ல, எங்கும் நிறைந்துள்ள, உருவமற்ற யானைமுகப் பிள்ளையின் அப்பனான, ஆறுமுகப் பிள்ளையின் தந்தையான, கங்கையை முடியில் வைத்துள்ள பார்வதியின் பர்த்தாவான, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட ஆண்டி உருவமான, மன்மதன் மாமனான, ரதியின் தந்தையான, நெற்றியில் “எக்ஸ்ட்ரா” கண்ணை உடையவரான, விஷ்ணுவின் மைத்துனரான, பாம்புகளை மாலையாக அணிந்துள்ளவரான, புலித்தோலை ஆசனமாகக் கொண்டுள்ளவரான, இராவணனுக்கு பார்வதியைக் கூட்டிக் கொடுத்தவரான, மோகினி (விஷ்ணுவை) புணர்ந்தவரான, சாக்கிய முனிவரிடம் கல்லடிபட்ட, மனிதப் புலாலை விரும்பியவரான, கோவணத்தை இழந்து ரிதபித்தவரான, கஞ்சிக்கு லாட்டரி அடித்துக் கொண்டு நாயன்மார் வீடுகளில் பிச்சை எடுத்தவரான, விஷத்தை உண்டவரான, மானைக் கரத்தில் வைத்திருப்பவரான வெள்ளியம்பலத்தில் கூத்தாடியவரான, மீனாட்சி அம்மனுக்கு ஆற்றாமல் ஓட்டம் எடுத்தவரான, மயிருக்காசைப் பட்டவரான, டாபர் வேலை பார்த்தவரான, மாட்டில் ஏறித் திரிபவரான, விருப்பு, வெறுப்பு அற்றவரான, மாட்டுச் சாணிச் சாம்பலில் அதிகம் அவா உடையவரான இன்னும் பல சிறப்புகளையும், கீர்த்திகளையும் உடைய, தேவாதி தேவ, கடவுளாதி கடவுளான வீராதி வீர வில்லாதி வில்லரான வெயிலடுச்ச வொச்சரான (சை!), தப்பாக எழுதிவிட்டேன். இதைப் படிக்க வேண்டாம்!) ஜெய கம்பீர கோலாகல மகா-௱-ஸ்ரீ மண்டையிலே பிளாஸ்திரி (அட இழவே! இதையும் அழித்து விடவும். கைபிசகாக எழுதிவிட்டேன்.) திரு திரு, திரு திரு மிகு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ, ஸ்ரீமத், ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமான் ஸ்ரீமான் ஆகிய மகா, மகா, மகா மகா மகா கனமும் மகா மகா மகா மகா மேன்மையும் தாங்கிய மாபெரும் கனம் பரமசிவக் கடவுள் அவர்கள், அவர்கள் அவர்களின் திவ்விய பரிசுத்த