இவ்வாறு நலம் கூறுவதால், தமிழ்ச் சான்றோர் இவ்வாறு கூறுவதால் - ஏழைகளே முன்னேற்றமுறச் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக எண்ணிவிடக் கூடாது. அதுபோலவே பொதுவுடைமைக்காரர்கள் செல்வ நிலையில் மக்கள் நிகர் என்ற நிலையை உண்டாக்கி விட்டோம்; உண்டாக்கி விடுவோம் என்று அவிழ்க்கும் பொய் மூட்டைகளை முழுதும் நம்பிவிட வேண்டும் என்று எண்ணிவிடக் கூடாது. ஏழ்மையின் வேரையே அழித்து விடுவோம் என்று சொல்வோர் வாய்ப்பந்தல் போடுவோரே! குன்றக்குடி அடிகளாரும் விடுதலை ஆசிரியரும் வாய்ப்பந்தல் வேலையில் ஈடுபடவேண்டாம். உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அறிவித்துத் தனிப்பட்டவர் கொண்டுள்ள அறியாமை ஏழ்மைகளையுடையவர்களுக்குச் சலுகை தேடவேண்டும். சாதியை ஒழிக்க முன் வரவேண்டும். வெளிப்படையாக சாதியின் பேரால் சுரண்டும் கூட்டத்தை ஒழிக்க முன்வந்து பாடுபட வேண்டும். வெளிப்படையாக மதத்தின் பேரால் மக்களைச் சுரண்டும் நிறுவனங்களை ஒழிக்கப் பாடுபடவேண்டும். வெளிப்படையாக ஏழ்மையை - வறுமையை ஒருபுறமாக ஒதுக்கி, சமநிலையின் பயனை மக்கள் நுகரும்படி செய்யலாம், அமெரிக்காவைப்போல! உருசியாவைப் போல! உலகப் பேரறிஞர்கள் செய்யும் முயற்சியெல்லாம், அறியாமையின் முதன்மையை முழுமையாக ஒழிக்க அல்ல. தனித்தனிஏழை மக்களைப் பலவாறாக – சாதி – மதம் – ஆகிய படுகுழிகளினின்று மீட்க – தனித்தனி மனிதனின் கெட்ட சூழ்நிலைகளை நல்லதாக்க! அதனால் அறிவு ஏணியில் சில படிகளில் அடி வைக்கும்படி செய்யலாம்; மற்றவர்போல் பொது நலத்தை அவர்கள் நுகரும்படி செய்யலாம். அறியாமை முழுதும் நீக்கிய நிலை ஏழ்மை என்பது இல்லாத நிலை - இரப்பார் இல்லாத நிலை - ஆகிய இந்த நிலையை நாம் உண்டாக்க வேண்டுமானால் அது புத்தர் |