பக்கம் எண் :

246

60
உண்டு என்பார்; இல்லை என்பார்!


உண்டு என்பாரை வடவர் ஆத்திகர் என்பர். இல்லை என்பாரை நாத்திகர் என்பர்.

காஞ்சி நாத்திகர் குப்புசாமியவர்கள் வெளியிட்ட ஆத்திக நாத்திக சம்வாதம் என்ற நூலில் உள்ள வடசொற்றொடர்களைத் தமிழாக்கி இங்கு வெளியிடப்படுகிறது.

உண்டென்பான் - (இல்லை என்பானை நோக்கி) கடவுள் நம்பிக்கை உமக்கு உண்டா?

இல்லை என்பான்:- கடவுள் என்று எதைச் சொல்லுகின்றீர்?

உண்டு:- உலகினர் எல்லோரும் அறிந்திருக்கையில் நீவீர் மட்டும் எதைச் சொல்லுகிறீர் என்று கேட்பது சரியா?

இல்லை:- உலகினர் எல்லோரும் அறிந்திருக்கும் போது நீரும் அறிந்திருப்பீரே. தவிர கண்டவண்ணம் அதை எனக்கும் காட்டக் கூடாதா?

உண்டு:- அது காட்டக் கூடியதன்று.

இல்லை:- குணமில்லையா அதற்கு? தொழில் இல்லையா அதற்கு? இவற்றைக் கொண்டாவது குறிப்பிடலாமே?

உண்டு:- ஆம்! தன் வயத்தனால், தூய உடம்பினன் ஆதல். இயல்பாகவே கட்டுக்களினின்று நீங்குதல், அருள்.