உடைமை. முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை, இவை எட்டும் கடவுளின் குணங்கள். இக் குணங்களால் ஆக்குவது - காப்பது - அழிப்பது - மறைப்பது - அருளுவது ஆகிய ஐந்து தொழில்கள். இக் குணங்களையும் செயல்களையும் கொண்டு கடவுளை அறிந்து கொள்ளலாம். இல்லை:- மேலே கடவுள் காணப்படாதது என்று சொன்னீரா, இல்லையா? இப்போது குணங்கள் செயல்களைக் கண்டதுபோல் சொல்லுகிறீர். காணப்படாதது எதுவோ அது உருவமில்லாதது. அதில் உள்ள குணங்கள் எப்படித் தெரிந்தன? தொழில்கள் எப்படித் தெரிந்தன? உண்டு:- ஏன் தெரியாது? காற்று என்பது காணப்படாததுதானே! குளிர்ச்சி, வெப்பம், மேலே படுவது ஆகிய மூன்று குணம் தெரியவில்லையா? மரங்களை முறிப்பது, நீர் மண்ணை வாரி இறைப்பது முதலிய செயல்களும் தெரியவில்லையா? இல்லை:- காற்றுக்கு இயற்கையில் குளிர்ச்சியுமில்லை; சூடுமில்லை; அவை தீயின் சேர்க்கையாலும் கதிரின் சேர்க்கையாலும் உண்டாவன. தண்ணீரில் பட்டு வந்தால் குளிர்ந்திருக்கும், தீயிற் பட்டுவந்தால் சூடாயிருக்கும். அவ்வளவுதான். அது அசையும் என்கின்றீர். அசையாத நிலையுடையதுதான். தட்பவெப்ப மாறுதல்தான் காரணம் அசைவுக்கு! இயற்கையில் காற்றுக்கு அசைவு இல்லை. ஆகையால் நீர் காட்டிய எடுத்துக்காட்டுகள் பிழையானவை. உண்டு:- என்ன ஐயா, ஒரே அடியாய் அடித்துப் போட்டு விட்டீர்கள்; பல நாட்களாக நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை யெல்லாம் மண்ணாக்கி விட்டீரே. குயவனுக்குப் பல நாள் வேலை. தடி எடுத்தவனுக்கு ஒரே நாள் வேலைதானா! இருக்கட்டும்; வேறு ஒன்றைக் காட்டிக் கேட்கின்றேன். இதோ இந்த வீடு, தானே இப் |