பக்கம் எண் :

248

படி ஏற்பட்டு விட்டதா? இதைக் கட்டியவன் ஒருவன் இருக்கத்தானே வேண்டும்? அவனை நாம் பார்க்கவில்லையானாலும் அவன் செயல் தெரிகின்றதல்லவா?

இல்லை:- அதுபோல் அங்கே ஒரு வீட்டைக் கட்டினான் கொல்லூற்றுக்காரன். இங்கொன்று கட்டியதைப் பார்த்தோம். அதுபோலத்தான் நீ காட்டிய இந்த வீட்டைக் கட்டியவன் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணுகிறோம். கண்ணிலே காணப்படுவதுதான் இதற்கெல்லாம் ஆதாரம். வேறு ஒன்றும் இருக்க முடியாது. அதுபோலவே இந்த உலகத்தைக் கட்டியவனும் ஒருவன் இருக்கின்றான் என்று எண்ணிக் கொள்ளவேண்டுமா! அதெப்படி? வீடுகட்டப்படுவதைப் பார்த்திருக்கிறோம், கட்டியவனையும் பார்த்திருக்கிறோம்; இந்த உலகத்தைப்போல் இன்னுமோர் உலகத்தைக் கட்டும்போது நீர் பார்த்தீரா? கட்டியவனை, நீர் பார்த்தீரா? சொல்லுமே.

அன்றியும் உம் கொள்கைப்படி கடவுள் எங்கும் நிறைந்தவர்! அப்படி இருக்கையில் அனைத்து உலகத்தையும் அவர் எங்கிருந்து கொண்டு கட்டி முடித்தார்? அனைத்து உலகிலும் அவர் இல்லையானால் அவர் எங்கும் நிறைந்தவராதல் எப்படி? சரி, கடவுள் வேறு; அனைத்துலகும் வேறா? உமது இந்த எடுத்துக்காட்டும் சரியில்லாமல் போயிற்றே!

உண்டு:- அதற்கும் அப்படிச் சொல்லிவிட்டீர். அனைத்துலகும் கடவுளும் கயிறும் பாம்பும் போன்றவை என்கின்றேன். இதற்கென்ன சொல்லுவீர்?

இல்லை:- கயிறும் பாம்பும்போல என்றீர். அப்படியானால் இரண்டும் ஒன்றா? இரண்டா?

உண்டு: இரண்டுதான்! ஆனால் மாலை நேரத்தில் கயிறும், பாம்பும் ஒன்றாகவே தோன்றும் அல்லவா? அதைக்கொண்டு சொன்னேன்.