பக்கம் எண் :

249

இல்லை: அப்படியானால் பாம்பு கயிறா? கயிறு பாம்பா?

உண்டு: பாம்பு கயிறுமல்ல; கயிறு பாம்புமல்ல.

இல்லை: அப்படியென்றால் கடவுள் அனைத்துலகு அல்ல. அனைத்துலகும் கடவுளல்ல என்று ஆகின்றது. சரி, கயிறு பாம்பாகத் தோன்றியது எப்படி?

உண்டு: முன்பு பாம்பைக் கண்ட பழக்கத்தால்.

இல்லை: உலகில் பாம்பு உண்டா, இல்லையா?

உண்டு: உண்டு.

இல்லை: உண்டு! அது இருந்ததால் கண்டானா? இல்லாமல் கண்டானா?

உண்டு: இருந்தால்தான் காணமுடியும். இல்லாததில் பொருளில்லையே.

இல்லை: அந்தத் தோற்றமாகிய, அதாவது இல்லாததாகிய பாம்பு கடித்தால் நஞ்சு ஏறுமா?

உண்டு: இல்லை.

இல்லை: கயிறுபோல் கடவுள் என்று சொன்னாய். பாம்பு போல் அனைத்துலகும் என்று சொன்னாய். கயிற்றில் பாம்பு பொய்யாய்த் தோன்றியதுபோல கடவுளிடமும் அனைத்துலகும் பொய்யாய்த் தோன்றுகின்றது என்று ஆயிற்று. ஆனால் முன்னம் ஒருவன் பாம்பை மெய்யாகக் கண்ட பழக்கத்தால் கடவுளையே அனைத்துலகமாக எண்ணுகின்றான் என்று ஆகின்றது. ஆயின் கயிறு வளைந்து கிடந்தால் சற்றேறக் குறைய பாம்பைப் போலத் தோன்றுவது சரிதான்! அனால் பாம்பின் தோற்றத்திற்கு கயிறு காரணமாய் இருந்ததுபோல அனைத்துலகின் தோற்றத்திற்குக் கடவுள் காரணமாக இருக்கவேண்டுமே! அப்படியானால் நாம் பாம்பையும் கண்டிருக்கிறோம்; கயிற்றை