பக்கம் எண் :

304

‘ஷண்முகாநந்தா டாக்கி’ என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரஸிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். மேலும், முதலில் மங்களகரமாக இருக்க வேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், காகுகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழையல்லவா? காரால், பிழைமொழியால் துவக்குவதுதானா மங்களகரம்? சரி, போகட்டும்.

வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் ‘மதுரித மொழியுடையாய் ஒரு வார்த்தை சொல்வாய்’ என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன்.

சச்சிதாநந்தனாக நடிக்கும் ஸ்ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடிவிடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டு விடுமாம்.

முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் மூக்கை முதலாளி வெட்டி விடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பது பற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா?

நகரதூதன், 19.9.1937

*