கங்கையாகவும், குறிப்புப் பொருட்பெருக்கு பாதாள கங்கையாகவும் மூவுலகும் தழுவி முழங்கிப்பாய்கின்றன. இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். மீராவின் குரல் கேட்கிறது. கூடவே போர்த்திய துணிக்குள்ளிலிருந்து பதிலும்! “வா, இந்தப் பக்கம்” “வந்தேன்” “கேட்டால்?” “சொல்வேன்” “எதன் மகிமையால் பேசுகிறாய்” நெஞ்சுக்கூட்டில் இருக்கும் தாயத்தின் மகிமையல்” இந்தத் துண்டுபோட்ட ஐயா கையில் என்ன வைத்திருக்கிறார்?” “ரெண்டு மந்திரிகள்” “அந்த டாக்டரம்மா இரைப்பைக்குள்ளே என்ன இருக்குது?” “நூத்துக் கணக்கில் கருச்சிதைவுப் பிண்டங்கள்” “இதோ இந்தப் பையன் பைக்குள்ள?” “பத்து வயசான எம்ப்ளாய்ன்மெண்ட் கார்டு?” “அந்த வயசுப்பொண்ணு ஏன் வாட்டத்தோடு நிற்குது?” “வயசுக்குவந்து வருடம் பன்னிரண்டு. வரதட்சணைக்கு வழியில்லை. அவள் கருப்பப்பையில் வரிமலை குமுறுது”. |