பக்கம் எண் :

13மீரா

“இந்தச் சின்னத் தம்பி தலைக்குள்ளே என்ன இருக்கு சொல்லு.”

“ஒரு ‘டைம் பாம்’ இருக்குது”

மீரா சுற்றிலும் ஒருமுறை பார்க்கிறார். ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் ‘தும்..தும்’ என்று மத்தளம் தட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவள் யார்? சாட்சாத் கவிதைச் செல்வி!

அவள் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு மெல்லத் திரும்புகிறார்.

நம்மைப் பற்றி என்ன வருமோ என்று அஞ்சி நழுவப் பார்க்கிறேன். அதற்குள் போர்வைக்குள்ளிருந்தவன் எழுந்து அமர்கிறான். சுற்றி நிற்கும் அத்தனைபேர் முகங்கள், அவன் முகம், என் முகம், மீரா முகம் எல்லாம் ஒரே சாயல், வேறுபாடே இன்றி எல்லாம் ஒரே முகம்.....

வாணியம்பாடி
29.8.86

இக்பால்