நெருக்கடிக்களுக்கிடையில் என்னை எழுதவைத்த ஜுனியர் விகடன் ஆசிரியர் அவர்களுக்கும், இக்கட்டுரைகளை உடனுக்குடன் அனுப்ப ஒருமுறைக்கு இருமுறை தட்டச்சு செய்து தந்த தம்பி து. இராசசேகரனுக்கும் என்றும் என் நன்றி உரியது. இந்தக் கட்டுரைகளைப் பின்னணியாக வைத்துப் பேச வேண்டிய சுவையான செய்திகள் நிறையவே உள்ளன. பிறகொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கவிஞர் இக்பாலிடம் முன்னுரை கேட்டேன். அவரோ, ‘முன்னுரை’ என்ற பெயரில் என்னை ஆகாய கங்கையால் நீராட்டியிருக்கிறார். அனிச்சப் பூக்களால் அர்ச்சத்திருக்கிறார். என்மீது அவருக்கு இருக்கும் காதலை எண்ணி எண்ணி, எண்ணி எண்ணிச் சிலிர்க்கிறேன். காதல் வாழ்க! -மீரா |