தான் ஓ.... நீங்கள் பிரதமர் ஆக வேண்டுமா; பிரபலம் அடைய வேண்டுமா...ஒரே வழி சினிமாதான்! இப்போது கண்டபோது மயக்கம் தரும் சினிமாவோடு உண்டபோது மயக்கம் தரும் சாராயமும் கிடைத்து விட்டது. தமிழர்கள் அதிர்ஷ்தசாலிகள்! ஊருக்கு வெளியே நிற்கும் கைகாட்டி மரங்கள் வழிப் போக்கர்களுக்கும் வாகனாதிகளுக்கும் பாதை காட்டுகின்றன. புதிதாய் ஊருக்குள்ளே பல சந்து முனைகளில் அம்புக்குறியோடு கைகாட்டிமரங்கள் முளைத்துள்ளன; ‘வா இந்தப் பக்கம்.... இது தான் சாராயக்கடைக்குவழி’ என்று அன்போடு அழைக்கின்றன. இந்தத் ‘தண்ணீர் தண்ணீர்’ விசிறிகளுக்கு வீட்டுக்குப் போகும் வழி காட்ட எந்தக் கம்பமும் இல்லை; கைகாட்டியும் இல்லை. ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று கவிஞர் பாடினார்... இன்று குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் எல்லாம் கோப்பை வாசனை குபுகுபுவென்று வருகிறது. எனக்கொரு யோசனை... கடைவீதிகளில், கல்லூரி பள்ளிக்கூடப் பகுதிகளில் கள்ளுக் கடை, சாராயக் கடை நடத்த இடம் கொடுக்காமல் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இடம் கொடுக்கலாம். அங்கே வரும் குடிமக்களை ‘வா, இந்தப்பக்கம்’ என்று சுடுகாடு பந்தத்தோடும் பாசத்தோடும் எளிதாய் அழைக்க முடியுமல்லவா? |