பக்கம் எண் :

  

கண்டனன் காலினுக்கு அணியை....!

வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியைத் தாண்டிய பிறகுதான் கவனித்தேன்.

அதே தோல்! அதே நிறம்! அதே மாதிரி நகம் மட்டும் வெளியில் தெரியும்படி கட்டை விரலுக்குக் கவசம்!

எள்ளளவும் சந்தேகமில்லை, என்னுடையதுதான்.....

வண்டி வேகமாகப் போகிறது. ஆனந்தம்-ஆத்திரம் இரண்டுக்கு மிடையில் என் மணம் அலைபாய்கிறது. ‘கண்டனன் காலினுக்கு அணியை.....! ‘என்று ஸ்ரீராம பக்த அனுமார் என்னுள்ளிருந்து கத்துகிறார்...

என்னைப் பிரிவுத்துயருக்கு ஆளாக்கிவிட்டு அந்த ஜோடிப் புறாக்களைக் கடத்திக் கொண்டு வந்த ஆள் என்