பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 36

எதிரே கால் மேல் கால்போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான். பறிகொடுத்தவன் பக்கத்தில் இருக்கிறானே என்று கூடக் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் வாட்ட சாட்டமாக உட்கார்ந்திருக்கிறான்.

இவ்வளவு எடுப்பாக உடுப்பணிந்திருக்கும் இந்த ஆளா இந்தக் காரியத்தைச் ... ... செய்திருப்பான்? ... ... செய்திருப்பான் ... எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? பெரிய அரசாங்க அதிகாரி போல ‘இந்து’ பேப்பரில் முகம் புதைந்திருக்கிறான். அப்படி என்ன ஆழமான விஷயம்... சுவாரஸ்யம்... ஈரான் ஈராக்கா?...

நல்ல படிப்பாளிதான் போ, தெரியும் உன்னை! முகத்தை எடும்...’கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் செருப்பு!’ என்று சின்னப் பையன் சீனு உன்னை நினைத்துத்தான் உருப் போட்டானோ?

பாவீ, நீ செய்தது நியாயம் தானா? அற்பம், அற்பம், அந்த இராவணன் வம்சமா நீ, இருக்கலாம்... பார்த்தால் தெரிகிறதே... அவனாவது வனாந்தரத்தில், ஆளரவம் இல்லாத இடத்தில் சீதையைக் கடத்திப் போனான். வாசலில் நூற்றுக்கணக்கில்குவிந்து கிடக்கும் அந்தக் கல்யாண மண்டபத்தில் எவ்வளவு பெரிய சந்தடியில் சத்தமில்லாமல் குறிவைத்து என் காலணியைக் கவர்ந்து சென்று விட்டாய் நீ!

சொர்க்கத்தில் நீச்சயிக்கப்பட்ட திருமணங்களும்.... எல்லாமே இந்த ஆவணி மாத்த்தில் தானா இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா... திருமணங்கள் பெருகப் பெருக செருப்புத் திருடர்கள் அல்லவா பெருகிப் போகிறார்கள்.

அரசாங்கம் இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. உடுக்கை இழந்தவனுக்கு