பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 62

எதையும் பிய்த்தெறிவது, பிரிப்பது, அடிக்கடி தாவுவது, மற்றவர் பொருளை அசந்த நேரம் பார்த்துக் கவர்வது- இவையெல்லாம் குரங்குகளின் பிறவிக்குணம் என்கிறார்கள். என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. சாதி சமயத்தைச் சொல்லி மக்களைப் பிரிப்பது, பதவிக்காகக் கட்சிவிட்டுக் கட்சி தாவுவது, பணத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வாக்குச் சீட்டுகளைக் கவர்வது இவை நம் அரசியல்வாதிகளுக்கேயுரிய ‘கருவிலே திருவுடைய’ குணங்கள். ஆதிகாலத்தில் யாரோ ஓர் அரசியல்வாதிதான் குரங்குகளுக்குத் தன் இனத்தின் குணங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

குரங்கிடமிருந்துதான் அரசியல்வாதி இந்த குணங்களைப் பெற்றிருக்கவேண்டும் என்று சிலர் மறுக்கலாம். எப்படியோ, மனிதனுக்கும் குரங்குக்குமிடையே இந்த கொடுக்கல் வாங்கல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

‘கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று தமிழ்க்குடியின் பழம்பெருமை குறித்து ஒரு புலர் பாடினார். அந்தப் பாட்டில் ‘வாளொடு’ என்பதற்குப் பதிலாக ‘வாலொடு’ என்று இருப்பதே பொருத்தம் என்று ஒரு கூட்டத்தில் ஒரு பேராசிரியர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற கருத்தை நிலைநாட்ட வசதியாக உதவும் இந்த “வால்”, பாட்டு டார்வினுக்குத் தெரியாமல் போனது நம் துரதிர்ஷ்டமே.... டார்வினுக்குத் தெரிந்திருந்தால் புதுமைப் பித்தன் கேலியாகச் சொன்னாரே ‘முதற்குரங்கே தமிழ்க் குரங்கு’ என்று அதை நிரூகித்துக் காட்டியிருப்பார்.

வால்தான் குரங்குகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இராமனின் தூதுவன் என்பதால் வேண்டுமென்றே