வளர்ந்துள்ளது. அது நம் பல்கலைக்கழகங்களுக்கும் தொற்றிவிட்டது. தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் சிதைந்தும் திருந்தும் போயுள்ள தமிழக ஊர்ப் பெயர் பலவற்றைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நுணுகி ஆராய்ந்துள்ளார். காவிரியாற்றின் பழமையான துறைகளுள் ஒன்று மயிலாடுதுறை. காவிரிச் சோலையில் தோகை விரித்தாடும் கோலமயில்களைக் கண்டு ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர் மயிலாடுதுறை என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆங்கிலேயர் நம் தேரைப் பார்த்துவிட்டு Car என்றார். அதன்பாலன் இன்று வரைக்கும் தேரோடும் வீதிகளையெல்லாம் North Car Street, South Car Street என்கிறோம். இன்னும் நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ள ஆங்கிலமோகம் போல் முன்பு வடமொழி மோகமும் இருந்தது. வடமொழிவாணர் ஒருவர் நாவில் மயில், மாயூரம் என்றும் மயிலாடுதுறை மாயூரபுரம் என்றும் மாறியிருக்கிறது. அது நாளடைவில் மாயவரம் என்று ஆகியிருக்கிறது என்று அறிஞர் சேதுப்பிள்ளை தெளிவு படுத்தியுள்ளார். அந்த ஆராய்ச்சியின் பயனால்தான் இப்போது மாயூரம் போய் பழைய மயிலாடுதுறை வந்திருக்கிறது. டால்மியாபுறத்தைக் கல்லக்குடியாக மாற்று என்று ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தினார் கலைஞர். அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பாரிஸ்கார்னரை ‘பாரிமுனை’ என்றும் கெல்லீலஸ கிள்ளியூர் என்றும் மாற்றினார். சென்னையைத் தமிழ்நாடு என்று அழைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். சங்கரலிங்க நாடார்.... பெயரில் என்ன இருக்கிறது என்று பேசாமல் இருக்க முடிந்ததா இவர்களால்? |