சொந்த ஊருக்கு மாறுதல் கோருவது உண்டு. ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று அவரும் பதில் கூறுவதுண்டு. அந்த முறை, என்னைப் போல் புதிதாய் ‘சர்வீஸ் கமிஷன்’ அருளால் வேலைக்கு வந்து சேர்ந்த ஓர் இளம் ஊழியர், “ஒரு கோரிக்கை ஐயா! இனிமேல் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்ஸ்பெக்ஷன் வராதீர்கள்” என்று துணிச்சலாய்ச் சொன்னார். அதிகாரி அசந்து போனார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மகாத்மியத்தை அழகாய்ச் சித்திரிக்கிறார் சார்லஸ் லாம்ப். உறுமீன் வரும்வரை வாடியிருக்கும் கொக்கைப்போல் ஞாயிற்றுக்கிழமையை அனுபவிக்க ஆறு நாட்களாய்க் காத்திருக்கிறார் ஒரு வங்கி அலுவலர். ஆனால் திங்கட்கிழமை அனுப்ப வேண்டிய ‘ரிட்டன்’, செவ்வாய்க் கிழமை செல்ல வேண்டிய ஆண்டறிக்கை, புதன்கிழமை போகவேண்டிய ‘பாலன்ஸ் ஷீட்’, வியாழக்கிழமை திரட்டவேண்டிய புள்ளி விவரங்கள், வெள்ளிக்கிழமை கெடுவாகிற பதிலறிக்கை, சனிக்கிழமை முடிக்க வேண்டிய நீண்ட நாளைய ஃபைல்கள் இப்படிச் சிந்தித்தே அந்த ஞாயிற்றுக்கிழமையின் புத்தம் புதுக் காலையும் பொன்மாலைப் பொழுதும் கவலையிலேயே கழிந்து விடுகின்றன. சுகமாக அனுபவிக்க வேண்டிய நேரம் சோகமாகிவிடுவதால் அந்த ஞாயிற்றுக் கிழமையைக் கருப்பு ஞாயிறு (Black Sunday) என்கிறார் சார்லஸ்லாம். எழுத்தைப் பகுதி நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் ஞாயிற்றுக்கிழமையை |