பக்கம் எண் :

91மீரா

என்று குதூகலமாகத் தனக்குள் பாடிக்கொண்டே நடப்பார்! ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்ற இளங்கோவடிகளின் ஒரே ஒரு வரியை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டே நடப்பார்!

குச்சு வீடும் ‘ஜப்தி’ செய்யப்பட்டால் ஏழைக் குடியானவன் எப்படிப் பரிதவிப்பானோ அப்படி ஞாயிற்றுக் கிழமையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அரசாங்க ஊழியர்களைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.

சில அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அலுவலகம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள்.

“ஏன் ஸார்! ஸ்டேட்மெண்ட் போகவில்லையே... நாளை வருவீர்களா?” என்று சற்றே அதிகார தொனியை அடக்கிக் கேட்பார்கள்.

“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஸார் ...” என்று பதில் வந்தால் “ஆமா... ஆமா... ஒரு வேளை வருவீர்களோ என்று பார்த்தேன்” என்று தம் எதிர்பார்ப்பை நயமாய் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு ஆறு மாதம் அரசாங்க அலுவலகத்தில் நான்வேலை பார்த்திருக்கிறேன். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அப்போது ஆண்டுச்சோதனை. மாவட்ட அதிகாரி குறிப்பிட்டபடி வெள்ளிக்கிழமை வரமுடியவில்லை. சனிக்கிழமை மாலை வந்து அடுத்த நாளும் இருந்து சோதனை (!) செய்தார். சோதனை முடிந்ததும் மாவட்ட அதிகாரி மனமிரங்கி “யாருக்கேனும் ஏதேனும் குறை இருந்தால் கூறலாம் என்றார். வழக்கமாக ஊழியர்கள்