என்று கேட்டார். ’விடுமுறைதான்’ சம்பந்தம் என்றேன். இந்து முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு விடுமுறைகூடத் தன் பங்குக்கு உதவமுடியும் என்ற உண்மை அப்போதுதான் அவ்வளவு படித்த எங்கள் முதல்வருக்குப் புரிந்தது. வாரம் ஒருமுறை வருவதுதான் ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை என்று அலட்சியமாகச் சொல்லிவிடமுடியாது. வேறொரு ஊரில் வேலைபார்த்துச் சனிக்கிழமை காரையோ, ரயிலையோ பிடித்து ஊர் போய்ச் சேரத் துடித்து நிற்பவர்களின் முகத்தைப் பாருங்கள்; புரியும் அதன் மகத்துவம். அந்த முகங்களின் மறுபக்கம் ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும், அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்க்கும் ஒரு மனைவியின் எதிர்பார்ப்பும் ஒரு மழலையின் ஏக்கமும் பிரகாசமாய்த் தெரியும். அதுவும் புதிதாய்த் திருமணமானவர் என்றால் கேட்க வேண்டியதில்லை. சனிக்கிழமை காலையிலிருந்தே அவர் பரபரப்பாக இருப்பார்; அலுவலகத்தில் இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் போவார்.. மாலை மணி ஐந்தாவதற்கு முன்பே ஃபைல்களைக் கட்டி வைத்துவிட்டு சக ஊழியர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடப்பார். “மாதங்களில் அவள் மார்கழி! மலர்களிலே அவள் மல்லிகை” என்பதை “மாதங்களில் அவள் மார்கழி கிழமைகளில் அவள் ஞாயிறு” |