சோழமண்டல சதகம் சிறப்புப் பாயிரம் கொண்டலங் கரத்தின் வேளாண் குலத்தில்வந்து உதித்த கோமான் கண்டலம் பொழில்சூழ் சிந்தைக் கனஅரு ணாச லேந்த்ரன் அண்டலர் பரவும் காளை ஆத்மநா தன்செய் சோழ மண்டல சதகம் கொண்டு வண்புகழ் நிறுத்தி னானே | 1 |
மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் ஈகைசெய்யும் வேளாளர் குலத்தில் தோன்றிய சித்தாய்மூர் அருணாசலம் அவர்கள் வேளூர் ஆத்மநாத தேசிகரைக் கொண்டு சோழமண்டல சதகம் பாடுவித்துப் புகழ்கொண்டார். காப்பு திருவளர் வேளாண் செல்வச் செழுங்குடி மிகுந்து நாளும் வருவளம் தழைத்த சோழ மண்டல சதகம் பாடத் தருகரம் ஐந்தும் ஐந்தும் தாழ்மதம் மூன்றும் மூன்றும் உருவளர் முக்கண் நால்வாய் ஓங்கலை உன்னி வாழ்வாம் | 2 |
வேளாண்குலச் செல்வர் குடிகள் மிகுதியாக வாழ்ந்து வளம் பெருக்கும் சோழ மண்டல வரலாறு கூறும் இச் சதகத்தைப் பாட விநாயகர் அருள் செய்வாராக. |