பக்கம் எண் :

2சோழமண்டல சதகம்

அவையடக்கம்

ஓர்ஊரைப் பாடுதல்அவ் வூருடைய கோமான்
          ஒருவனைப்பா டுதல்புலவோர்க்கு உரிமையது அல்லால்
பாரூரும் பலவாய்அவ் வூருடைய பலரும்
          பல்கியஓர் மண்டலத்தைப் பாடுவதும் எளிதோ?
நேரூரும் பழையனவாய் இருந்தசெய்யுள் வழக்கு
          நிகழ்உலக வழக்கநிலை நின்றதுறை வழியே
சீரூரும் சோழமண் டலசதகம் தனைநான்
          செப்புகின்றேன் விழுப்பொருளாய்ச் செய்வர்பெரி யோரே

3

ஓர் ஊரைப் பற்றியோ அல்லது அவ்வூரில் வாழும் தலைவர் ஒருவரைப் பற்றியோ பாடுவது என்பது புலவர்க்கு உரிய தொழிலாகும்.

பல ஊர்களும், அவ்வூர்களில் தலைமைப் பெருமக்கள் பலராகவும் உள்ள ஒரு பெரிய மண்டலத்தைப் புகழ்ந்து பாடுவது எளிதான செயல் அல்ல.

பழமையான பல ஊர்கள், அவ்வூர்களின் செய்யுள் வழக்கு உலக வழக்கு ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பான செய்திகளைத் தொகுத்து இச் சோழமண்டல சதகத்தை நான் பாடுகிறேன். பெரியோர்கள் இந் நூலைச் சிறப்பான நூலாகக் கொள்வார்களாக.