எட்டில் ஒன்று உறும்தென் புலத்தார் தெய்வம்விருந்து ஒக்கல் தானென்று ஓரைந்தும் பெறும்தென் புவியில் எட்டிலொன்று பெற்றார் இதுவே பெற்றதன்றோ சிறந்த சோழன் பெருமையினும் சிறந்தோர் வேளாண் தருமரபோர் மறந்தும் பொய்யா தவர்வாழ்வு வளம்சேர் சோழ மண்டலமே | 69 |
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை என்பது குறள் (43). ஆனால் வேளாளர்கள் உழுகுடியிடமிருந்து எட்டில் ஒன்றை மட்டுமே இறையாகப் பெற்றனர். ஆறில் ஒன்று திறை வாங்கும் அரசரினும் வேளாளர்கள் சிறந்தவர்கள். அவர்கள் மறந்தும் பொய் பேசாதவர்கள். புங்கனூர்க் கிழவன் அறங்கூர் பெரியோம் அரசுவரில் ஆற்றாது அஃதே அமைகஇனிக் கறங்கூர் கெண்டை புரட்டும்எனக் கலியா ணத்தில் கவிகேட்டுப் புறங்கூர் பவளக் கடாமுழுதும் பொன்னங் கலத்தில் புடைசொரிந்த மறங்கூர் புங்க னூர்க்கிழவன் வளம்சேர் சோழ மண்டலமே | 70 |
புங்கனூர் என்னும் ஊரில் புங்கனூர்க் கிழவன் என்னும் வள்ளல் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டுத் திருமணத்திற்கு வந்த ஒரு புலவர் திண்ணையிலும் கெண்டை (சரிகை வேட்டி) புரளும் என்று பாட அவருக்குச் சரிகைச் சோமன் முதலிய பரிசுகளை அளித்தான். புலவர் பாடிய பாடல் : வெண்ணையும் பார்த்தன்னை கண்ணையும் பார்த்துத்தம் மெய்யில்பட்ட புண்ணையும் பார்க்கும் திருநெடு மால்புங்க னூர்க்கிழவன் பண்ணையும் சேல்களும் வாவியும் |