குடந்தை மருதன் தாழப் புதைக்கும் திருத்தங்கித் தடங்கா வாழை தனிபழுப்பப் பாழிப் புயமா மலைமருதன் பலர்க்கும் உதவும் பான்மையினால் காழில் பொலியும் இலையரிதாய்க் காயும் அரிதாய்க் கனியுமின்றி வாழைக் குருத்தும் கிடையாத வளம்சேர் சோழ மண்டலமே | 68 |
கும்பகோணத்தில் திருத்தங்கி, மருதன் என இருவர் வாழ்ந்து வந்தனர். திருத்தங்கி கஞ்சன், மருதன் கொடையாளி, ஒளவையார் மருதனைப் புகழுமுகத்தான் ஒரு வெண்பாப் பாடினார். செல்வத்தைப் புதைத்து வைக்கும் திருத்தங்கி வீட்டு வாழை மரத்திலேயே பழுத்துள்ளது. ஆனால் மருதன் வீட்டு வாழையிலோ குருத்து, பூ, காய், கனி எதுவும் இல்லை. ஏனென்றால் அவை பலர்க்கும் உதவின என்றார் ஒளவையார். திருத்தங்கி தன்வாழை தேன்பழுத்து நிற்கும் மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தொன்று இலையுமி்லை பூவுமிலை காயுமிலை என்றும் உலகில்வரு விருந்தோடு உண்டு என்பது அப்பாடல். |