பக்கம் எண் :

60சோழமண்டல சதகம்

அறுபத்துநான்கு குடி

ஈழ நீத்தோன் அவளைத்திரை
          இரும்பால் பூட்டும் வரம்படிக்கும்
காழில் வெறித்த கார்முழுதும்
          கரத்தின் மேலாம் கவிமுழுதும்
சூழும் பொதுவில் சிறப்பாகத்
          தொடுக்கப் புனைந்த தொன்மையினோர்
வாழும் அறுபால் நான்குகுடி
          வளம்சேர் சோழ மண்டலமே
84

இப்பாடலில் சோழநாட்டு வேளாளர் 64 குடியினரின் சிறப்புக்கள் பல கூறப்பட்டுள்ளன. உழுதொழிலின் பகுதியில் சில கூறப்பட்டுள்ளன. புலவர்களால் புனைந்துரைக்கப்படும் தொன்மைச் சிறப்புடையவர்கள் அவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.

குடிதாங்கி

உலகில் இலம்என்று உரையாமே
          உதவல் குணத்தோர்க்கு உளதாமே
இலகும் எறும்புக் கால்பதம்வேறு
          இல்லை எனயா வதும்ஈந்தான்
புலவன் மகிழ்ந்து பிற்பாதி
          புகலக் கேட்ட புகழாளன்
மலைகொள் புயத்துக் குடிதாங்கி
          வளம்சேர் சோழ மண்டலமே
85

சோழநாட்டில் மன்னார்குடி அருகே களந்தை என்னும் ஊரில் குடிதாங்கி என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவரிடம் ஒரு புலவன் சென்று கவி பாடி யாசகம் கேட்டான். புலவம் வேண்டியபடி குடிதாங்கி உதவினான்.

எறும்புக்குக் கூட ஒரு பருக்கை இல்லை என்ற பஞ்ச காலத்தில் யானையும் கவளம் கொள்ளாது தெவிட்டும்படி உதவினான். உலகில் இல்லை என்று கூறாமல் உதவுதல் நல்ல குணமுடையார்க்கு அழகாகும். வள்ளுவரும்,

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள

(குறள். 223)

என்றார்.

இல்லைஎன வந்தவர்க்கு இல்லையெனக் கூறாமல்
நாளும் உணவளிக்கும் நல்லதம்பிச் சர்க்கரைமன்