பக்கம் எண் :

சோழமண்டல சதகம்79

பிற்சேர்க்கை

சங்ககாலச் சோழர்கள்

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
இளம்பெரும் சென்னி
உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி
கரிகால் பெருவளத்தான்
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
கோச்செங்கணான்
கோப்பெருஞ் சோழன்
சேட்சென்னி நலங்கிள்ளி
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
தித்தன்
நல்லுருத்திரன்
நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
மணக்கிள்ளி
முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி
வேல்பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளி

இளஞ்சேட்சென்னி எனப் பெயர்கொண்ட மூவரையும் ஒருவராகவும் கொள்வர். அடைமொழியின்றி நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன் என்று சிலர் குறிக்கப்பெறுகின்றனர். பெருஞ்சோழன், பெருங்கோக்கிள்ளி, தேர்வண்கிள்ளி, பெரும்பூட் சென்னி, பொலம்பூட்சென்னி என்று சிலர் குறிக்கப்பெறுகின்றனர். சங்ககாலச் சோழ மரபில் கிள்ளி, சென்னி என இரு மரபு இருந்துள்ளமை பெறப்படும். கிள்ளி மரபினர் உறையூரிலும், சென்னி மரபினர் புகாரிலும் ஆண்டிருக்கலாம்.

முத்தரையர்

பெரும்பிடுகு முத்தரையன் (குவாவன் மாறன்)655 - 680