பக்கம் எண் :

80சோழமண்டல சதகம்

இளங்கோவதி அரையன் (மாறன் பரமேசுவரன்)680 - 705
பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன்)705 - 745
விடேல் விடுகு விழுப்பேரதி அரையன் (சாத்தன் மாறன்)745 - 770
மாற் பிடுகு (பேரதியரையன்) 770 - 791
விடேல் விடுகு முத்தரையன் (குவாவன் சாத்தன்)791 - 826
சாத்தன் பழியிலி 826 - 851

இவர்களது தலைநகர் நியமம். சிலர் செந்தலை (சந்திரலேகைச் சதுர்வேதமங்கலம்), தஞ்சை என்றும் கூறுவர்.

பிற்காலச் சோழர்கள்

விசயாலய சோழன் (846 - 881)
முதல் ஆதித்த சோழன் (871 - 907)
முதல் பராந்தக சோழன் (907 - 953)
கண்டராதித்த சோழன் (950 - 957)
அரிஞ்சய சோழன் (956 - 957)
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957 - 970)
உத்தம சோழன் (970 - 985)
முதல் இராசராச சோழன் (985 - 1014)
முதல் இராசேந்திர சோழன் (1012 - 1044)
முதல் இராசாதி ராச சோழன் (1018 - 1054)
இரண்டாம் இராசேந்திர சோழன் (1051 - 1063)
வீரராசேந்திர சோழன் (1063 - 1070)
அதிராசேந்திர சோழன் (1070)
முதல் குலோத்துங்க சோழன் (1070 - 1120)
விக்கிரம சோழன் (1118 - 1136)
இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133 - 1150)
இரண்டாம் ராசராச சோழன் (1146 - 1163)
இரண்டாம் ராசாதிராச சோழன் (1163 - 1178)
மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 - 1218)
மூன்றாம் ராசராச சோழன் (1216 - 1256)
மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)

சோழர் செப்பேடுகள்

பேரையூர்ச் செப்பேடு I -கரிகால் சோழன்
பேரையூர்ச் செப்பேடு II -கரிகால் சோழன்
வேளஞ்சேரிச் செப்பேடு-முதல் பராந்தக சோழன்
உதயேந்திரம் செப்பேடு-முதல் பராந்தக சோழன்
அன்பில் செப்பேடு-சுந்தரசோழன்