| இனவியல் | | 210 | தேவ பாணி தெரியுங் காலை மாசறு துழாய்முடி மலைந்த சென்னி நீர்நில மளந்த நெடியோன் மேற்றே. | (39) | | | | 211 | சுடர்கதிர்த் திங்கள் சூடி யோற்கும் படர்திரைப் பனிக்கடன் மாதடிந் தோற்கு முரிய காலமு முளவென மொழிப. செயிற்றியனார். | (40) | | | | 212 | வேந்தன் வேண்டு நெறிசெய் தாலும் வாய்ந்த மதியு மரபும் வாழ்த்தலும் விதியென மொழிப மெய்ந்நெறிப் புலவர். | (41) | | | | | 5-கலம்பகம். | | | | | 213 | சொல்லிய கலம்பகஞ் சொல்லி லொருபோகு முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே யம்மனை யூசல் யமகங் களிமறஞ் சித்துக் கால மதங்கி வண்டே 1கொண்டன் மருள்சம் பிரதம் வெண்டுறை தவசு வஞ்சித் துறையே யின்னிசை குறமே யகவல் விருத்த மெனவருஞ் செய்யுட் கலந்துட னெய்திய வந்த மாதி யாக வருமென மொழிப.2 | (42) |
[பி-ம்.] 1 ‘கொண்டன் மருள்சம் பிரதம்வெண் டுறைதவம் வஞ்சித் துறையே யின்னிசை குறமே யகவல் விருத்த மெனவருஞ் செய்யுட் கலந்துட னெய்திய வந்த மாதியாய் வருமென் றறைந்தனர் வாய்மொழிப் புலவர்’. [ச. பி.] 2இதற்குப்பின் சேர்க்குமாறு, ‘சொல்லிய கலம்பகத் தொடர்பு நோக்கி லொருபோகு முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே யம்மனை யூசன் மதங்கு களிமறஞ் சித்துக் கால மடக்கே வண்டே கொண்டன் மருள்சம் பிரதம் வெண்டுறை தாழிசை வஞ்சித் துறையே யின்னிசை குறமே யகவல் விருத்தமென வந்த செய்யுட் கலந்துட னெய்தி யந்த மாதியாய் வருமென மொழிப’. (43) என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச. பி.] |