| பன்னிருபாட்டியல் | | 207 | வரன்முறை பிறழ வுறுப்பு மயங்கி மிக்குங் குறைந்தும் வருவது கொச்சக வொருபோ காமென வுரைத்தனர் புலவர்.1 | (36) | | | | 208 | 2கொச்சகத் தன்மையிற் கொச்சக மென்ப.3 நற்றத்தனார். | (37) | | | | 209 | தேவப் பிரணாம மெனும்வட மொழியைத் தேவ பாணியெனத் திரித்துவழங் கினரே. செயிற்றியனார். | (38) |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்க்க வேண்டியனவாக, ‘தரவு.........றாழிசைமுறையின்றிச் சுரிதக நிமிர்ந்து மெண்ணிடை பிறழ்ந்தும் வருவது கொச்சக வொருபோ கடி...கை ...ருபதிழி பாய்நாற் பதின்மிகு மென்ப.’ (39) ‘எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் டனிச்சொல் வார மோடைந் நிலைத்தே.’ (40) என இரண்டு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச. பி.] 2‘கொச்சக மென்பது ஒப்பினாகிய பெயர். ஓராடையுள் ஒருவழியடுக்கியது கொச்சகமெனப்படும். அதுபோல, ஒரு செய்யுளுட் பல குறள் அடுக்கப்படுவது கொச்சக மெனப்படும்’ (தொல். செய். 121) எனவும், ‘இனிக் கொச்சக மென்பது ஒப்பினாகிய பெயர்: என்னை? பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகமென்ப; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராயடுக்கியுந் தம்மு ளொப்ப அடுக்கியுஞ் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகமென்றாராகலி னென்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கிக் கொய்சகமென்று சிதைத்தும் வழங்குப’ (தொல். செய். 153) எனவும் பேராசிரியரும், “பல கோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகமென்பவாகலின் அதுபோலச் சிறியவும் பெரியவும் விராயடுக்கியும் தம்மு ளொப்ப அடுக்கியும் வருஞ் செய்யுளைக் கொச்சக மென்றார். இது ஒப்பினாகிய பெயர். இக்காலத்து இது மகளிர்க்குரியதாய்க் கொய்சகமென்று வழங்கிற்று” (தொல்.செய்.153) என நச்சினார்க்கினியரும் கூறியவாற்றா னறிந்து கொள்க. இனிக் கொச்சைத்தன்மையினென்பதூஉம் பாடம். “கொச்சகமராகம்” (தொல்.செய். 121) என்பதனுரையில் ‘சிறப்பில தனைக் கொச்சையென்று கூறும் வழக்குநோக்கி இதனையும் சிறப்பின்மை யாற் கொச்சக மென்றா ரென்பாரு முளர்’என நச்சினார்க்கினியரே கூறினார். [பி-ம்.] 3 இதற்குப்பின், ‘தேவரை வாழ்த்தலிற் றேவர்பாணி யென்ப’ என ஒரு சூத்திரம் காணப்படுகிறது. [ச. பி.] |