200 | அதுவே, குடைச்சொற் சிந்தடி யீற்றில்வைத் தந்தக் குடைச்சொல் 1லாதி குறளகத் தடக்கி யீற்றய லடியினு மீற்றினு மிறைவனைப் போற்றிப் புகழ்ந்து புகறல் வேண்டும். இந்திரகாளியார். | (29) |
| | |
201 | ஒட்டிய குடைப்பொரு ளுரைக்கு நேரசை கட்டளை யாகுதல் கடனென மொழிப. | (30) |
| | |
202 | கட்டளை யென்பது கருதுங் காலை யீற்றடி யொழிய வேனைமூன் றடியும் பாற்படு மெழுத்தின் பகுதியொப் பதுவே. | (31) |
| | |
203 | இதற்கே யாமெழுத் தெண்ணுங் காலைக் குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமு 2மொற்று மொழித்துயி ருயிர்மெய்யுங் கொளலே. | (32) |
| | |
204 | மோனையு மெதுகையுந் தொடையென மொழிப. | (33) |
| | |
205 | சாற்றியமா றொத்த றனிமை மிகுதிசமம் போற்றுமுடம் பாடு புலனுண்மை - யேற்றுந் தலைப்பாடு பாதி தருகொடை பத்து நிலைப்பாடு நேரசையா நேர். | (34) |
| | |
| [இஃது நேரசை தனிமைக்கண் வந்தது.] 4.- ஒருபோகு. | |
206 | தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை யொழித்திரு வகையு ளொன்றாற் கடவுட் பழிச்சு மொருபோ கிருமூன் றுறுப்பு மமைந்தொருங் கியலு நயந்திகழ் கலியுள் வண்ணகம் போதினு மெண்ணே போதினு மோதிய வுறுப்பாற் பேர்புகன் றனரே. | (35) |