பக்கம் எண் :

 லென்றனர் பிறவுந் தொன்னெறி மரபிற்
றத்தந் தொழிற்குத் தகுவன புகற
லெத்திறத் தோர்க்கு முரிய வென்ப1
கொச்சகக் கலியொடு நெடுவெண் பாட்டே.
(25)
 

 

 
197   நெடுவெண் பாட்டின் முந்நான் கிறவாது
தொழிலொடு குறித்துத் தோன்றுஞ் செய்யு
ளொன்றுமூன் றைந்தே ழொன்பான் பதினொன்
றென்றிவை யிவற்றி 2னிகந்தன விழுக்கே.
(26)
 

 

 
198   பிறப்பே யோகை பேணுறு வளர்ச்சி
சிறைப்பட வச்ச முறுத்தலொடு நான்கு
மாரா யுங்கா லைந்துமூன் றிடையா
யோரே ழொருபொருட் குயர்ச்சியிழி பொன்றே.        இந்திரகாளியார்.
(27)
 

 

 
 

3.-வேந்தன் குடைமங்கலம்.

 
   
199   முன்னீ ரடியிலுங் குடைத்தொழி லியம்பியும்
பின்னீ ரடியிற் றனிநிலை யிரட்டியுங்
கொற்றவற் 3புகழ்ந்து குடையென முடிக்கு
நற்றிற நேரிசைக் குடைவெண் பாட்டே.4
(28)

[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்க்குமாறு,

‘கொச்சகக் கலியொடு கலிவெண் பாட்டே
நெடுவெண் பாட்டின்முந் நான்கிற வாது
நேரடி நெடிலடி கழிநெடி லடியெனு
மூவகை யடியி னீரிரண் டாகிக்
கோவை யொப்பது கொச்சகக் கலியே’.

(28)

என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.]

2 னிழிந்தன. 3 புணர்ந்து. 4 இதற்குப்பின் சேர்க்குமாறு,

‘கொடைமங் கலப்பொருள் குறித்த நேரிசைத்
தொடையமை வெள்ளை சுடர்முடி சூடிய
மொய்கழன் மன்னைமுற் பாடுங் கலியென
மையறு புலவர் வகுத்துரைத் தனரே’.

(32)

என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.]