பக்கம் எண் :

188   ஒன்பது பதினொன் றென்பது காப்பே.                       பரணர். (17)
 

 

 
189   அகவல் விருத்தமுங் கட்டளை யொலியுங்
கலியின் விருத்தமுங் கவின்பெறு பாவே.
(18)
 

 

 
190   பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத்
தெள்ளிதிற் செப்பும் புலவரு முளரே.
(19)
 

 

 
191   முதற்க ணெடுக்கு மகவல் விருத்த
மெழுத்தின் பகுதி யெண்ணினர் கொளலே.
(20)
 

 

 
192   நீணெறி யுவகை 1யாண்மக விற்கே
ழைம்மூ வாண்டே 2யவர்முதற் சாற்றல்.
(21)
 

 

 
193   பொங்குகதி ரிளம்பிறை புலியின் சிறுபறழ்
குஞ்சரக் குழவி கோளரிக் குருளை
யடலிள விடையே யாறிரண் டாண்டி
னிடைநிக ழுவமை யென்மனார் புலவர்.
(22)
 

 

 
194   பெண்மக விற்குப் பேசு மிடத்து
மானின் கன்று மயிலின் பிள்ளை
தேனி னின்பந் தெள்ளாத் தேறல்
கரும்பி னிளமுளை கல்லாக் கிள்ளை
யிளந்தளிர் வல்லி யென்றிவை யெல்லாம்
பெய்வளை மகளிர்க் கெய்திய வுவமை.
(23)
 

 

 
195   இளங்3கதிர்த் திங்க ளெல்லார்க்கு முரித்தே.                   பரணர். (24)
 

 

 
196   அவைதாம்,
பிள்ளையைப் பாடலிற் பிள்ளைப் பாட்டாய்ப்
பிறப்பே யோகை காப்பே வளர்ச்சி
யச்ச முறுத்த லுடன்செங் கீரை
தால்சப் பாணி முத்தம்வா ரானை
யம்புலி சிற்றில் குழமக னூச
 

[பி-ம்.] 1 லே ழாகு. 2 நிறமே நிலமே மருதம். 3 முதல. 4 முரை பெறு பாநான் குடைய; முரைபெறு நான்குமுடைய. 5 யிசைந்தன புலவர் தவிர்ந்தன வரையார்.