பக்கம் எண் :

 

இனவியல்

 
219 ஆதி நிலையே குழாங்கொள லென்றெடுத்
தோதிய புலவரு முளரென மொழிப.
(48)
 

 

 
220ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காத
னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே.1
(49)
 

 

 
221பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. (50)
 

 

 
222பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். (51)
 

 

 
223மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும்.
(52)
 

 

 
224மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும்.
(53)
 

 

 
225அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. (54)
 

 

 
226தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. (55)
 

 

 
227ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் 2பெண்டுக் கியல்பென மொழிப.               பொய்கையார்.
(56)
 

 

 
228காட்டிய முறையே நாட்டிய வாண்பாற்
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே.
(57)
 

 

 
229பாலன் யாண்டே யேழென மொழிப.(58)
 

 

 
230மீளி யாண்டே பத்தியை காறும். (59)
 

 

 
231மறவோன் யாண்டே பதினான் காகும். (60)

[பி-ம்.] 1இதற்குப் பின் சேர்த்துக்கொள்ளும்படி,

‘ஐந்தொன் (பது)பதி னொன்றுபன் மூன்றே
பத்தொன் பதுநா லுடனை யைந்து
முப்பதொ டெட்டுய ரெண்ணைந் தென்ன
யாண்டி னெல்லை யியம்பினர் புலவர்’.

(49)

என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. (ச-பி.)

2பெண்ணிற் கியல்பென.