| | பன்னிரு பாட்டியல் | | | 232 | திறலோன் யாண்டே பதினைந் தாகும். | (61) | | | | | | 233 | பதினா றெல்லை காளைக் கியாண்டே. | (62) | | | | | | 234 | அத்திற 1மிறந்த முப்பதின் காறும் விடலைக் காகு மிகினே முதுமகன். அவிநயனார். | (63) | | | | | | 235 | நீடிய நாற்பத் தெட்டி னளவு மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. | (64) | | | | | | 236 | சிற்றில் பாவை கழங்கம் மனையே பொற்புறு மூசல் பைங்கிளி யாழே பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே 2நன்மது நுகர்த லின்ன பிறவு மவரவர்க் குரிய வாகு மென்ப. | (65) | | | | | | 237 | வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர் மாந்தர் கலிவெண் பாவிற் குரியர். | (66) | | | | | | 238 | நாலு வருணமு மேவுத லுரிய வுலாப்புறச் 3செய்யுளென் றுரைத்தனர் புலவர். அவிநயனார். | (67) | | | | | | | 7-சின்னப்பூ.* | | | 239 | மலையும் யாறு நாடு மூரும் பரியுங் களிறுங் கொடியு முரசுந் தாரும் பெயரு மெனத்தெரி பத்துஞ் சொல்லு மெல்லையின் முதற்குறட் கண்ணே சின்னத் தொழிலை மன்ன வைத்துப் பின்னர்க் குறளுட் பாட்டுடைத் 4தலைவ ரியற்பெயர் வைத்தவர்க் குரிமை தோன்றுஞ் | |
[பி-ம்.] 1மியன்ற. 2யொளிபெறு காத லின்னன பிறவு. 3செய்யு ளெனவுரைத் தனரே. *“வழக்கொடு சிவணிய வகைமை யான” (தொல். பொருள். புறத். 31) என்பதனுரையில் நச்சினார்க்கினியர் “சிவணியவகைமை என்றதனானே முற்கூறியவற்றோடே நாடும், ஊரும், மலையும், யாறும், படையும், கொடியும், குடையும், முரசும், நடைநவில்புரவியும், களிறும், தேரும், பிறவும் வருவன வெல்லாங் கொள்க. இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு சின்னப்பூ என்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமாறுணர்க” என்பர். [பி-ம்.] 4தலைவர், பெயர்வைத் தவர்தமக் குரிமை தோன்றுஞ். |