| | இனவியல். | | | 249 | எந்தை 1யுடைப்பெயர்க் கெதுகை சாற்றி யந்தமி லின்பம் பொருளா 2வேத்திப் பொருளு மறனும் 3வீடும் பழித்து மடன்மா வேறுதன் மாதர்க் குரித்தே. | (78) | | | 10-மறம். | | | 250 | பெருநில வேந்தன் மகட்பால் 4வேண்டி யொருபெருந் தூத னுரைத்தமொழி கேட்டுக் குறுநில மறவன் 5வெஞ்சினந் திருகி 6மாற்றமிக வுரைப்பது மறமென மொழிப.7 | (79) | | | 11-பல்சந்தமாலை. | | | 251 | சொன்ன கலம்பக வுறுப்புவகை நீக்கி மன்னிய பத்து முதனூ றளவா வந்த மரபின் வரூஉஞ்செய்யுண் முதலா வந்தது பல்சந்த மாலை யாகும்.8 | (80) | | | 12-இணைமணிமாலை. | | | 252 | இணைமணி மாலை தணிவிலந் தாதியாய் மறையவர் பாவும் வணிகர்தம் பாவின் றுறையு மியைந்தீ ரைம்பது வருமே. | (81) |
[பி-ம்.] 1 யுடையபெயர்க். 2 வேற்றி. 3 வீடு மழித்து. 4 வேண்ட, வொருபெருந். 5 வெஞ்சின வஞ்சின, மறமிக மொழிவது. 6 மாற்றமென. 7 இதற்குப் பின் சேர்த்துக்கொள்ளுமாறு, ‘கூடாக் குலமுதன் மன்னன் மகள்வேண்டத் தாதையுந் தாயுந் தன்னைய ரனைவரு மாறுசொன் மகட்பாற் காஞ்சியு மறனே’. (62) என ஒரு சூத்திரம் தனியே யெழுதப்பட்டுள்ளது. [ச-பி.] 8 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு, ‘உறுப்பி னீக்கிய பலவகைச் சந்த மிறுத்த வகைய தியற்பல சந்தம்’. (64) என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] |