| | பன்னிரு பாட்டியல் | | | 253 | வெண்பாக் கலித்துறை யீரிரண் டியைந்த வொண்பா நூறவை யிணைமணி மாலை.* | (82) | | | 13-இரட்டைமணிமாலை. | | | 254 | வெண்பா முதலாக் கலித்துறை பின்வரு மிந்த விருப திரட்டைமணி மாலை. | (83) | | | | | | 255 | ஆதியந்தம் வெண்பாக் கலித்துறை 1யேதமின்றி வருவ திரட்டைமணி மாலை 2யதுவே நாலைந் தியலு மென்ப. | (84) | | | 14-மும்மணிமாலை. | | | 256 | மிகுத்த வெள்ளை கலித்துறை யகவல் விருத்த மும்மணி 3விளம்புமந் தாதி4. | (85) | | | 15-நான்மணிமாலை. | | | 257 | 5வெண்பாக் கலித்துறை யகவல் விருத்தம்† நண்பாய் வருவது நான்மணி மாலை. | (86) | | | | | | 258 | அகவலு மகவல் விருத்தமு நாற்ப தகவலை முன்வைத் தறைவது கடனே.‡ | (87) |
*வெண்பாவகவ லிணைமணிமாலையுங் கொள்வர் இலக்கணவிளக்கப் பாட்டியலார். [பி-ம்.] 1யேதமின் றியல்வ. 2அதுவே, நாலைந் தியலுமென்மனார் புலவர். 3‘மாலையந் தாதி. 4இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு, ‘வெண்பாக் கலித்துறை யகவல் விருத்தம் வண்பா மூன்றவை மும்மணி மாலை’. (68) ‘வெள்ளை கலித்துறை யகவல் விருத்தங் கொள்வ மும்மணி கோத்தவந் தாதி’. (69) என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. 5 ‘வெண்பா முன்வரக் கலித்துறை யகவல் விருத்த நண்பாய் வருவது நான்மணி மாலை யென்று வகுத்துரைத் தனரே’. [ச-பி.] † வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல் எனத் தொடுப்பர் பிற்காலத்தர். ‡ இது நான்மணிமாலைக்குப் பொருந்தாதிருக்கிறது. |