பக்கம் எண் :

 

இனவியல்

 
259வெள்ளை கலித்துறை யகவல் விருத்தங்
கொள்வது நான்மணி கோத்தவந் தாதி.1
(88)
 

16-கலம்பகமாலை.

 
260

 

2ஒருபோ குடனே யம்மனை நீக்கி
வெள்ளை முதலா வெல்லா வுறுப்புந்
தள்ளா வியலது கலம்பக மாலை.3
(89)
 

 

 
261ஒருபோ கம்மனை யொழித்துவெண் பாமுதற்
கருதிற் பேரது கலம்பக மாலை.
(90)
 

17-மும்மணிக்கோவை.

 
2624வெள்ளையு மகவலு நேரிசை யாகக்
கலித்துறை வரவந் தாதி யாகி
முறைமையி னியல்வது மும்மணிக் கோவை.
(91)
 

 

 
263தோன்றிய வகவல் வெள்ளை கலித்துறை
மூன்றும் வருவது மும்மணிக் கோவை.*
(92)
 

 

 
264மும்மூன் றொருபொருண் மிசைவரு மென்ப. (93)

[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி,

‘வெண்பா வகவல் கலியே வஞ்சியெனு
நன்பா நூறவை நான்மணி மாலை’.

(70)

‘அதுவே யந்தாதி யாக வருமே’.

(71)

என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச-பி.]

2 ஒருபோ குடனம் மனைநனி நீக்கி. [ச-பி.] 3 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி,

‘அந்த மாதி யாகியுங் கலம்பகம்
வந்த செய்யுளள வாகினும் வருமே’.

(73)

என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]

4 ‘அகவலும் வெள்ளையு நேரிசை யாகக்
கலித்துறை வரவந்த மாதி முறைமையி
னியல்வது மும்மணிக் கோவை யாகும்’. [ச-பி.]

* இதற்கும் அளவு முப்பது. இஃது ஆசிரியம் வெண்பாக் கலித் துறையாக வருமெனவும், மும்மணிமாலை வெண்பாக் கலித்துறை ஆசிரிய விருத்தமாக வருமெனவும் கொள்க.