| | பன்னிருபாட்டியல் | | | | 18-கலியந்தாதி | | | 265 | வல்லின மெல்லின மிடையின 1வெழுத்துப் புல்லி மருங்கு போகா தொன்றிக் குறிலெனிற் குறிலே நெடிலெனி னெடிலே 2பொருந்தி நாற்கலை 3கொண்டோ ரடியாய்த் திருந்து மிவ்வகை நான்கடி யாகியு மோரொலி யாகியு மெண்ணான் காகிய 4கலையொடு பொருந்தியுங் குறிலு நெடிலு முறைமுதல் வரினு மவ்வெழுத் தாகியு மிப்பரி சியன்ற முப்பது கட்டளை மிக்கது கலியந் தாதி யாகும். | (94) | | | | | | 266 | 5வெண்கலி யுஞ்சில சிறுபான்மை வருமே. | (95) | | | 19-ஒலியந்தாதி. | | | 267 | தத்த மினத்தி லொப்புமுறை பிறழாது நாலடி யீரெண் கலையொரு முப்பது கோலிய தொலியந் தாதி யாகும். | (96) | | | | | | 268 | ஈரொலி 6யாகிய வெண்ணான்கு கலையெனச் சீரியற் புலவர் 7செப்பினர் கொளலே. | (97) | | | | | | 269 | வண்ணக மென்ப தொலியெனப் படுமே. | (98) | | | 20-யானைத்தொழில். | | | 270 | மூவகை நிலனு மூவகை நிறைவும் பல்வகைத் தேயமு மெழுவகை யுறுப்பும் வருணமும் யாண்டு மைவகைக் கொலையும் | |
[பி-ம்.] 1 வொற்றுப். 2 பொருந்து. 3 கொண்டதோ ரடியாய்த். 4 ‘கலையொடு பொருந்தியுங் குறிலுங் குறிலு நெடிலு நெடிலு மிம்முறை முதல்வர அவ்வெழுத் தாகியு மிப்பரி சியன்ற முப்பது கட்டளை கலியந் தாதி யாகும் பெயரென் றறையல் வேண்டும்’. [ச-பி.] 5 ‘வெண்கலி யுஞ்சிறு பான்மைசில் லிடத்துள’. 6 யாகி யெண்ணான்கு. 7 செப்பின ரென்ப. [ச-பி.] |