பக்கம் எண் :

 

இனவியல்

 

 

மிருவகை நடையு மைவகை யுணர்வு
முடையோர்ப் பேணலு முளப்படப் பிறவு
நண்ணிய வேளாண் பாவி னலம்பெற
வெண்ணி யுரைப்ப தியானைத் தொழிலே.
(99)
 

 

 
2711கிரிசரம் வனசர நதிசர மென்றிவை
நிலைபெறு நிலனென நிறுத்திசி னோரே.
(100)
 

 

 
272உயரமு நீளமுஞ் சுற்று மளவினிற்
குறையா தியல்வது நிறைவெனப் படுமே.
(101)
 

 

 
273பல்வகைத் தேயங் கொல்களிறு பிறக்கும்
பல்வகைத் தேயமு மென்மனார் புலவர்.
(102)
 

 

 
274பாத நாலுங் கையும்வா லதியுங்
கோசமு நிலனுறத் தீண்டுதல் குறியே.
(103)
 

 

 
275குலமெனப் படுவது பலவகை வருணமு
நலனுற வுரைக்கு நலத்த தென்ப.
(104)
 

 

 
276நலமிகு வாழ்நாள் பொலிவுற வியம்புதல்
யாண்டென மொழிப வியனெறிப் புலவர்.2
(105)
 

 

 
277கையுமுற் கூறுங் கடியபிற் கூறுங்
கூர்ங்கோ டிரண்டுங் கொலைத்தொகை வகையே.
(106)
 

 

 
278முன்ன ரூன்றிய காற்குறி தன்னிற்
பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப.
(107)
 

 

 
279பிறழ விடுவது வக்கிர மதுவே
சாரிகை விகற்பமு மாகு மென்ப.
(108)
 

 

 
280நன்மை யியற்றலுந் தீமை யியற்றலும்
பற்றிய நன்மை தீமை நினைத்தலுங்
கயக்கறு கால நினைத்தலும் புலனே.
(109)

[பி-ம்.] 1 மலையே யாறே காடே யென்றிவை. [ச-பி.]

2 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,

‘அரும்பெறற் றடக்கையிற் பாதத் திறத்திற்
றிருந்துபு வாலிற் சினமிகு வாயிற்
பொருந்திறற் கோட்டிற் கொல்லுதல் கொலையே’.

(85)

என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.]