பக்கம் எண் :

 

பன்னிருபாட்டியல்.

 
281வழுவா துடையோ ரேவ லியற்ற
லுடையோர்ப் பேண லென்மனார் புலவர்.
(110)
 

[மேல் நண்ணிய என்றதனா லாசிரியவடியாற் பாடுவாருமுளர்.]

 
282அகவலு முரித்தென வறைகுந ருளரே. (111)
 

121-வருக்கமாலை.

 
283மொழிக்குமுத லாகிய வெழுத்துக் கெல்லாம்
வருக்க முரைப்பது வருக்க மாலை.
(112)
 

22-நாமமாலை, புகழ்ச்சிமாலை.

 
2842மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை
நேர்ந்தவடி 3மயக்க நாம மாலை.4
(113)
 

 

 
285ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி
நாடிய பாத மயங்க வைப்பி
னாம மாலை மற்றது மடந்தையர்க்
காமெனிற் புகழ்ச்சி மாலை யாகும்.
(114)
 

 

 
286அதுவே, செங்கலை வண்ணப் பாவு மியங்கும்.        கோவூர்கிழார். (115)
 

 

 
287வெள்ளடி யியலாற் 5புணர்ப்போன் குறிப்பிற்
றாள்ளா 6வியலது புகழ்ச்சி மாலை.                 சேந்தம்பூதனார்.
(116)
 

23-இன்னிசைத்தொகை.

 
288தொண்ணூ றேனு மெழுப தேனு
7மின்னிசைத் தொடுப்பி னின்னிசைத் தொகையே.8
(117)

[பி-ம்.] 1 மொழிக்கு முதலெழுத்தின் வருக்க மெல்லாம்.

2 மாந்தர்க். 3 மடக்கு.
4 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,
‘மாதர்க் கெனினது புகழ்ச்சி மாலையென்
றோதினர் விளங்க வுயர்மொழிப் புலவர்’.

(93)

என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]

5 புணர்ப்போர். 6 வியல்பது. 7 மின்னிசை தொடுப்பினஃ தின்னிசைத் தொகையாம். 8 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,

 ‘இனிதி னாசை மேம்பா டுடைமையி
 னின்னிசை யென்பர் தொன்னெறிப் புலவர்’.

(97)

என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.]