| | இனவியல் | | | 289 | எண்ணிய வகையா னின்னிசை வெண்பாத் தொண்ணூ றெழுபது தொடுப்பதத் தொகையே. கோவூர்கிழார். | (118) | | | | | | | 24-விருத்தவகை.* | | | 290 | பரிசிலை யானை 1வாள்குடை வேல்செங் கோலொடு நாடூ 2ருரைப்பி னகவல் விருத்தம் பத்தென 3வேண்டினர் புலவர். | (119) | | | | | | | 25.-ஐம்படைவிருத்தம். | | | 291 | சக்கரந் தனுவாள் சங்கொடு தண்டிவை யைம்படை யகவல் விருத்த மாகும். | (120) | | | | | | | 26-நாழிகைக்கவி. | | | 292 | ஈரிரண் டியாமத் தியன்ற நாழிகைச் சீர்திகழ் வெண்பாப் பாடுநர் யாவரு மிருநான் கேழே ழிருநான் காமெனக் கன்னன் முப்பது மெண்ணின ரினிதே. | (121) | | | | | | 293 | மன்னர் கடவுளர் முன்னிலை யாக வன்ன கடிகை யென்னு மியல்பிற் றொகுநெறி யன்னவை நேரிசை வெண்பா. | (122) |
[முதல் யாமம் ஏழளவும் பாடி எட்டாவதில் யாமம் ஒன்றென்றும், இரண்டாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் இரண்டென்றும், மூன்றாம் யாமம் ஆறளவும்பாடி ஏழில் யாமம் மூன்றென்றும், நான்காம் யாமம் ஏழளவும் பாடி எட்டில் யாமம் நான்கென்றும் பாடின் முப்பதுவெண்பாவாம்]
* பரி முதலியவற்றைப் பத்துப்பத்தாகக் கூறும் ஒன்பதுவகை விருத்தமும் அவ்வப்பெயரான் விளங்குமென்றுணர்க. [பி-ம்.] 1 வாளொடு வேறேர். 2 ருறுப்பி. 3 விளம்பினர். 4 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி, ‘வரிசிலை யானை வாளொடு வேலே தேர்பரி நாடூ ருரைப்பி னகவல் விருத்தம் பத்தென விளம்பினர் புலவர்’. (98) என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] |