பக்கம் எண் :

 

பன்னிருபாட்டியல்

 
294பாவே யினமே யென்றிவை யிரண்டு
மேவிய வகையது நவமணி மாலை.
(123)
 

 

 
 

28-கைக்கிளை மாலை.

 
2951இரங்க வருவது மயங்கிய வொருதலை
யியைந்த நெறியது கைக்கிளை மாலை.2
(124)
 

 

 
296தாயர் சேரிய ராயர் தீங்குழ
றென்றல் சேமணி யன்றி றிங்கள்
வேலை வீணை மாலை கங்குல்
காம னைங்கணை கண்வளர் கனவென
வெஞ்சிய நன்னிற வேனில் குயிலே
கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேக்கை
பயிறரு3 நன்னலம் பாங்கர் பாங்கிய
ரியன்ற பருவர லென்மனார் புலவர்.
(125)
 

 

 
297முல்லை யசோகு மாந்தளிர் தாமரை
யல்லி நீல மைங்கணை யாகும்.
(126)

[மயங்கிய என்றதனால் ஓரினப்படுத்திப்பாடுவாருமுளர். பாடும்பொழுது மருட்பாவாற் 4பாடப்படும்: அல்லாதவழி ஆசிரியமும் வஞ்சியும் ஒழிய அல்லாத பாவானும் இனத்தானும் 4பாடப்படும். சிறுபான்மை ஆசிரியப்பாவானு மினத்தானும் 4பாடப்படும் (எனக் கொள்க.)]

 

29-அரிபிறப்பு.

 
298சேலே யாமை யேனஞ் சிங்கங்
கோல வாமனன் மூவகை யிராமர்
கரியவன் கற்கி யெனவரு கடவுளர்
புரிதரு தோற்றந் தெரிதரப் பராஅய்ப்
பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டி
 

[பி-ம்.] 1 இயங்க. 2 இதற்குப்பின், ‘கைக்கிளை யென்ப தொருதலைக் காமம்’ என ஒரு சூத்திரம் காணப்படுகிறது. 3 நன்னிலம். 4பாடப்பெறும். [ச-பி.]