பக்கம் எண் :

 

இனவியல்

 
  யினமொழி நாட்டி யகவல் விருத்த
மொருப தியற்றுத லாழியோன் பிறப்பே1.
(127)
 

 

 
 

30-அட்டமங்கலம்.

 
299ஒருவனைக் காக்கவென் றிறைவனை யேத்திய
வெண்வகை யகவல் விருத்தம் புணர்த்த
னண்ணிய வட்ட மங்கல மென்ப.
(128)
 

 

 
300இறைவனை யேத்திய வெண்வகை மங்கல
மறிதரும் பாவே யகவல் விருத்தம்.                  சேந்தம்பூதனார்.
(129)
 

 

 
 

31-இல்லறவெள்ளை.

 
301கலைதரு வண்ணமும் வெள்ளையு மொன்பா
னிலைபெறப் புணர்ப்பினஃ தில்லற வெள்ளை.
(130)
 

 

 

[இதனுள், கலைதருவண்ணம் என்றதனால் வெண்கலிப்பா ஒன்றானும், நிலைபெற என்றதனாற் சந்தவகை யொன்பதினாலும் வெண்பா ஒன்பதினாலும் பாடுவாருமுளர்.]

 

32-மங்கலவெள்ளை.

 
302சந்தமும் வெள்ளையுந் தருவன கற்புடை
மங்கல வெள்ளை வருவன வொன்பான்.
(131)
 

 

 
303அதுவே,
வெண்கலி யானும் 2வருதற்கு முரித்தே.                  மாபூதனார்.
(132)
 

 

 
304சந்தமும் வெள்ளையுந் தனித்தனி புணர்த்தலு
மந்தமில் புலவ ராமென மொழிப.                        சீத்தலையார்.
(133)
 

 

 
 

33-தாரகைமாலை.

 
305இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை.
(134)

[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி,

‘போற்றி யொருவன் புறங்காப்பு...க்கு
மாற்றல் சான்ற வகவல் விருத்தம்’.

(108)

‘வெண்கலி தானும் வருதற்கு முரித்தே’.

(111)

என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன.

2 வருதலு. [ச-பி.]