பக்கம் எண் :

 

பன்னிருபாட்டியல்.

 
 

34-செந்தமிழ்மாலை.

 
306எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை
செப்பிய 1நெறியது செந்தமிழ் மாலை.
(135)
 

 

 

[பாவானும் இனத்தானும் 2பாடுவாரு முளர். நான்கு முதற்பாவானாதல் ஒருபாவி னினத்தானாதல் 3பாடுக என்பாருமுளர்.]

 

35-தாண்டகம்.

 
307மூவிரண் டேனு மிருநான் கேனுஞ்
சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று
ளறுசீர் குறியது நெடியதெண் சீராம்.
(136)
 

 

 
308அறுசீ ரெண்சீ ரடிநான் கொத்தங்
கிறுவது தாண்டக மிருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே.                                பல்காயனார்.
(137)
 

 

 
309மங்கல மரபின் மானிடர் கடவுளர்
தம்புக ழுரைப்பது தாண்டக வகையே.
(138)
 

 

 
310தாண்டக மானிடர் கடவுளர்க் குரித்தே.                     மாபூதனார். (139)
 

 

 
311அடிவரை நான்கும் வருமெழுத் தெண்ணி
நேரடி வருவது தாண்டக 4மாகும்.                          சீத்தலையார்.
(140)
 

 

 
 

36-பதிகம்.

 
312ஆசிரி யத்துறை யதனது விருத்தங்
கலியின் விருத்த மவற்றி னான்கடி
யெட்டின் காறு முயர்ந்த வெண்பா
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்
பாட்டுவரத் தொடுப்பது பதிக மாகும்.
(141)
 

 

 
 

37-சீர்மெய்க்கீர்த்தி.

 
313சீர்நான் காதி யிரண்டடித் தொடையாய்
வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியு
மந்தத் தவன்வர லாறு சொல்லியு
 

[பி-ம்.] 1 வகையது. 2 பாடுவாருளர். 3 பாடுவாருமுளர். 4 மென்ப.