| | இனவியல் | | | மவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவ னியற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத் திறம்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி.1 | (142) | | | | | | 314 | 2நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியி னந்த முரையாய் முடியு மெனவுரைத் தனரே. கோவூர்கிழார். | (143) | | | | | | | 38-செருக்களவழி. | | | 315 | செய்த நிலைபெறு புகழ்புனை நேரிசை வெண்பா வின்னிசை வெண்பாப் பஃறொடை வெண்பா மறக்கள வழியே. | (144) | | | | | | 316 | நேரிசை யின்னிசை பஃறொடை வெண்பா போரின் களவழி புகலப் படுமே. | (145) | | | | | | | 39-மறக்களவஞ்சி. | | | 317 | குறள்சிந் தளவடி யகவ லடிவிராஅய் வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்கள மெஞ்சா துரைப்பது மறக்கள வஞ்சி. | (146) | | | | | | 318 | இயங்குபடை மன்ன ரிகற்களம் புகழ்ந்த மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி. | (147) | | | | | | | 40-செருக்களவஞ்சி. | | | 319 | விருத்தவகை பத்தான் விளம்பு மதனைச் செருக்கள மெனவே செப்பினர் புலவர். | (148) | | | | | | | 41-ஆற்றுப்படை. | | | 320 | புரவலன் 3பரிசில் கொண்டு மீண்ட விரவலன் வெயிறெறு மிருங்கா னத்திடை வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர் பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப் புரவல னாடூர் பெயர்கொடை பராஅ யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை. | (149) |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி, ‘மதிபுரை வெண்குடைக் கீழரி யணைமிசை விதியினி திருந்தென மெய்பெற நாட்டே’. (122) என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. 2 நிரைபெறு. 3 பரிசு. [ச-பி.] |