பக்கம் எண் :

 

பன்னிருபாட்டியல்.

 
321ஓங்கிய வதுதா னகவலின் வருமே. (150)
 

 

 
322புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே. (151)
 

 

 
 

42-கண்படைநிலை.

 
323காலைபகன் மாலை யாழ்முறை யறத்திய
லமைச்சிய லரசிய லேனை யியலிசை
1நாட கத்திய லோடு நான்மறை
முறையே யெய்தினை யூழி வாழி
யினிய மகளிரோ டின்பத்துயில் கொள்கென்
றிங்ஙன முரைப்பது கண்படை யாகும்.
(152)
 

 

 
 

43-துயிலெடைநிலை.

 
324கண்படை மன்னவர் முன்னர்த் தண்பதம்
விடிய லெல்லை யியல்புறச் சொல்லித்
தந்த திறையருந் தாராத் திறையரு
2மேத்தி நின்மொழி கேட்டினி தியங்க
வேண்டின ரித்துயி லெழுகென விளம்பி
னதுவே மன்னவர் துயிலெடை நிலையே.
(153)
 

 

 
 

44-விளக்குநிலை.

 
325துளக்கமின் மன்னர்க் காம்விளக் குரைப்பது
விளக்கு நிலையென வேண்டினர் புலவர்.
(154)
 

 

 
 

45-கடாநிலை.

 
326கொற்றவை தனக்குக் கொற்றவ ரெறியுங்
கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும்.
(155)
 

 

 
327வடாஅதுறை கன்னிக்கு மன்னவ ரெறிந்த
கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும்.      பெருங்குன்றூர்கிழார்.
(156)

[பி-ம்.] 1 நாடகத் தியலொடு நான்கு முறைமுறை, யெய்தினை யூழிவாழி யினிய, மகளிரொ டின்பத் துயில்கொள்கென் றின்ன, உரைப்பது கண்படை யாகுமென்ப. 2 மேற்ற; மேத்திநின் மொழிகேட் டினிதியங்க வேண்டின, ரித்துயி லெழுகென வியம்பி னதுவே, மன்னவ ரின்பத் துயிலெடை நிலையே. [ச-பி.]