| | இனவியல் | |
| | 46-யாண்டுநிலை. | |
| 328 | வையக மன்னவன் 1மன்னுக பல்யாண் டெய்துக வென்ப தியாண்டுநிலை யாகும். | (157) |
| | | |
| | [இது பெரும்பான்மை நேரிசைவெண்பாவாற் பாடப்பெறும். சிறுபான்மை எல்லாப்பாவானும் பாடப்பெறும்.] | |
| | 47-பறைநிலை. | |
| | | |
| 329 | காவல ரினிதுறத் தேவர்காத் தளிக்கெனக் கடவுளர் விழவினுங் கதிர்முடி விழவினு நாடு நகரமு நலம்பெற வியம்பி வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய மொழிவரத் தொடுப்பது பறைநிலை யாகும். | (158) |
| | | |
| | 48-அந்தாதித்தொகை. | |
| 330 | வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளிற் பண்பா வுரைப்பதந் தாதித் தொகையே. | (159) |
| | | |
| | 49-புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ. | |
| 331 | புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறமையின் மருட்பாச் செய்யுளின் வருமே. | (160) |
| | | |
| | 50-பாதாதி. | |
| 332 | அகவடி யுகிரே விரல்புற வடியே பரடே கழலே கணைத்தாண் முழந்தாள் குறங்கே யல்குல் கொப்பூழ் வயிறதன் வரையே யிடையே மயிரி னொழுக்கே முலையுகிர் விரலே முன்கை யங்கை தோளிணை கழுத்தே முகநகை செவ்வாய் மூக்கே கண்ணே காது புருவ நுதலெனு மாறைந் துறுப்புட னிரண்டும் பாத மாதியா வேண்டுதல் புணர்ப்பினஃ தோதிய பாத மாதியா மென்ப. | (161) |