| | பன்னிருபாட்டியல். | |
| | 51-பயோதரப்பத்து, நயனப்பத்து. | |
| 333 | பணைமுலை நயனம் பாங்கா மகவல் விருத்தம் பத்தென விளம்பினர் புலவர். | (162) |
| | | |
| 334 | ஆகிய கண்முலை யகவல் விருத்தம். பெருங்குன்றூர்கிழார். | (163) |
| | | |
| | 52-உழத்திப்பாட்டு. | |
| 335 | புரவலற் கூறி யவன்வா ழியவென் றகல்வயற் றொழிலை யொருமை யுணர்ந்தன ளெனவரு மீரைந் 1துழத்திப் பாட்டே. | (164) |
| | | |
| | 53-குறத்திப்பாட்டு. | |
| 336 | இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமுந் திறப்பட வுரைப்பது 2குறத்திப் பாட்டே. | (165) |
| | | |
| 337 | குறத்திப் பாட்டு மதனோ ரற்றே. | (166) |
| | | |
| | 54-ஒருபாவொருபது. | |
| 338 | வெள்ளை யாத லகவ லாத றள்ளா வொருப தொருபா 3வொருபது. | (167) |
| | | |
| | 55-இருபாவிருபது. | |
| 339 | வெள்ளை யகவல் பின்னர் முறைவைத் தெள்ளா 4தியல்வ திருபா விருபஃது. | (168) |
| | | |
| 340 | ஒருபா 5வொருபது மிருபா 6விருபதுங் கருதிய வெள்ளையு மகவலுங் காட்டினர். | (169) |
| | | |
| | 56-கோவை. | |
| 341 | கோவை யென்பது கூறுங் காலை மேவிய களவு கற்பெனுங் கிளவி யைந்திணை திரியா வகப்பொரு டழீஇ முந்திய கலித்துறை நானூ றென்ப. | (170) |